Monday 7 February 2011

வந்தாறுமூலையில் 1 பொதியில் 7 பேர் உண்ணும் அவல நிலை

வந்தாறுமூலையில் வெள்ளத்தினால் பாதிக் கப்பட்டு நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள், ஒரு உணவுப் பொதியில் 7 பேர் உண்ணும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள் ளதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு மாவட் டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நிலை யில் உள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் மக்கள் தமக்கு இதுவரை எதுவித உணவுப் பொருட்களும் வழங்கப்பட வில்லையென தெரிவித்தனர்.

வந்தாறுமூலை மேற்குப் பிரதேசத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த வெள்ளம் காரணமாக பலத்த பாதிப்புகளை சந்தித்துள்ள போதிலும் இதுவரையில் எதுவித நிவாரணமும் தமக்கு வழங்கப் படவில்லையென கவலை தெரிவிக்கின்றனர்.

தமது குழந்தைகளுக்கு பால்மா கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலையிலேயே தாம் உள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நிவாரணம் வழங்கும் அரசியல்வாதிகள் பிரதான வீதிகள் மற்றும் வெள்ளப் பாதிப்புகள் குறைந்த பகுதிகளில் நிவாரணங்களை வழங்கிவிட்டு செல்வதாகவும் தமக்கு எதுவித நிவாரணமும் கிடைப்பதில்லையெனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த போது வெளியேற முடியாமல் வீட்டில் பரண் அமைத்து தங்கியிருந்ததாக தெரிவிக்கும் இந்த மக்கள் தாம் ஓரளவு நீர் வற்றிய பின்பே வெளியேறி முகாம்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதாகவும் தெரி விக்கின்றனர்.

எனினும் தங்களை வந்து பார்த்து உணவுகளை பெற்றுக்கொடுக்க எந்த அதி காரிகளும் முன் வரவில்லையெனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் தமது வீடு தேடிவந்து வாக்கு கேட்கும் அரசியல் வாதிகள் தம்மை மறந்தது தொடர்பில் எதிர்காலத்தில் தகுந்த பாடம் புகட்டப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

Saturday 23 May 2009

பிரபாகரன் தொடர்பான செய்திகளை பார்வையிட்ட 12 தமிழ் இளைஞர்கள் கடத்தல்!!

மட்டக்களப்பு நகரில் கடந்த புதன்கிழமை 12 தமிழ் இளைஞர்கள் சிவிலுடை தரித்த பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிரபாகரன் தொடர்பான செய்திகள் நாளுக்குநாள் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மக்கள் இச்செய்திகளை அறிய பெரிதும் ஆர்வ ம் காட்டி வருகின்றனர். மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள நெட்கபேக்களில் பெருமளவான மக்கள் கூட்டம் அலை மோதியதைக் காணக்கூடியதாகவிருந்தது. அரசாங்கத்தின் பொய்ச் செய்திகளை நம்பாத பெருமளவான இளைஞர்கள் இணையத்தளங்களுடாக பிரபாகரன் தொடர்பான செய்தி களையும் காணொளி படங்களையும் அறிய ஆவலு டன் முண்டியடித்து வந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை நண்பகலளவில் நகரிலுள்ள சில நெட்கபே நிலையங்களில் திடீரென சிவிலுடையில் வந்த சிலர் அங்கு இணையத் தளங்க ளில் கூட்டமாக பார்வையிட்டுக் கொண்டிருந்த 12 இளைஞர்களை பலவந்தமாக ஜீப்பில் ஏற்றிக் கொண்டுசென்றதை நேரில் பார்த்த மக்கள் தெரிவித் துள்ளனர்.
போலிஸாரின் நீல நிற ஜீப்பொன்றில் சிவிலுடையில் வந்த சிலர் தாம் பொலிஸ் எனக்கூறியே இவ்விளைஞர்களைக் கொண்டுசென்றதாகவும். நேட்கபே நடத்து னர்கள் சிலரும் இவர்களால் தாக்கப்பட்டதாகவும் நெட்கபே நடத்துனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் கொண்டுசெல்லப்பட்ட 12 இளைஞர்களும் மட்டக் களப்பு பொலிஸ் நிலையத்திலோ அல்லது மட்டக்களப்பு சிறைச்சாலையிலோ இதுவரை கொண்டுவரப்படவில்லையென பொலிஸ்நிலைய வட்டாரங்களை மேற்கோள் காட்டிய தகவலொன்று தெரிவிக்கின்றது.
இதனால் மட்டக்களப்பு மக்கள் பீதியும் கலக்கமும் அடைந்துள்ளனர். இதற்கும் மேலாக மட்டக்களப்பிலிருந்து வெளிச்செல்லுகின்ற அனைத்து கம்பிவழி தொலைபேசிகளும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் ஒட்டுக்கேட்கப்படுவ தாக தகவலொன்று தெரிவிக்கின்றது. அத்துடன் மாலை 7 மணிக்குபின் இளைஞர் கள் வீதிகளில் திரிந்தால் சுட்டுக்கொல்லப்படுவார்களென கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எடிசன் குணதிலக உத்தரவிட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Thursday 21 May 2009

அதிர்ச்சியும் அதிசயமும்!!



பிரபாகான் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகின்ற இவ்வேளையில் தமிழக செய்தி இதழொன்று தலைவர் தான் இறந்த செய்தியை தானே தொலைக்காட்சியில் பார்ப்பதைப்போல கிரபிக்கில் வடிவமைத்து வெளியிட்டிருந்ததால் மக்கள் பரபரப்புடன் அப்பத்திரிகையை வாங்க அலைமோதினர். அந்த பத்திரிகைக்காரர்கள் நல்ல வருமானத்தையும் அன்று பெற்றுக்கொண்டார்கள். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் உங்களிடம் கேட் கின்றோம் தயவுசெய்து பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தாதீர்கள். உல கெங்குமுள்ள தமிழர் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் உன்னத வீரனை காட்சிப்பொருளாக்கி இலாபம் தேட எந்தவொரு மானமுள்ள தமிழனும் விரு ம்பமாட்டான்.

பாக்கிறவன் பேயனா இருந்தால்....




இந்த படத்தை பார்த்தல் எல்லாம் உங்களுக்கு விளங்கும்.

Tuesday 19 May 2009

மட்டக்களப்பில் வெடிகொழுத்தி வெற்றிவிழா கொண்டாட்டம்!! காணொளி பதிவு!!


மட்டக்களப்பில் இராணுவத்தினருடன் சேர்ந்து இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் துணைஆயுதக் குழுக்களைச்சேர்ந்த சிலரும் இன்று காலை மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்துக்கருகில் வெடிகொழுத்தி வெற்றிவிழா கொண்டாடியபொழுது எடுக்கப்பட்ட காணொளிப்பதிவு.

Friday 15 May 2009

மிகப்பயங்கரமான இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்!! அதிர்ச்சிதரும் புகைப்படம்!!

கடந்த 48 மணிநேரத்துக்கும் மேலாக முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலுள்ள மக்கள் மீது படையினர் நடத்தி வருகின்ற மிக மோசமான பொஸ்பரஸ் எரிகுண்டு தாக்குதலில் 4000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாவும் வவுனியாவிலிருந்து எமக்குக் கிடைத்த தகவலொன்று தெரிவிக்கின்றது. இந்நிலையில் இதுவரைக்கும் வான்மூலமாக நடத்தப்பட்டு வந்த இந்த பொஸ்பரஸ் எரிகுண்டுத் தாக்குதல் தற்பொழுது எறிகணைகள் மூலமாகவும் ஏவப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன. எந்தவொரு பகுதியில் பட்டாலும் உடனடியாக அதை எரித்து கருக வைக்கும் தன்மையுடைய இவ் இரசாயன குண்டு உலக நாடுகளில் தடை செய்யப்பட்டாலும். உலகை தனது பொய்பிரசாரங்களால் ஏமாற்றி இரசா யன வெடிமருந்துகளை தாம் பாவிப்பதில்லையென இலங்கை அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் வன்னியில் பொதுமக்கள் மீது இரசாயனக் குண்டுகள் பாவிக்கப்படுகின்றமைக்கான ஆதாரம் ஒன்று எமது கைக்குக்கிடைத்துள்ளது. வன்னிக் களமுனையிலுள்ள இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மூலமாக கிடைக்கப் பெற்ற இப்புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்.

Tuesday 12 May 2009

தவறுக்கு வருந்துகின்றோம்.!!

வுனியா, புதுக்குடியிருப்பு, மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களிலுள்ள நலன்புரி முகாம்களிலிருந்து கடத்திக்கொண்டு செல்லப்படும் தமிழ் இளைஞர், யுவதிகளைக் கொன்று அவர்களது உடல் உறுப்புக்களான இருதயம், கண்கள், சிறுநீரகம், ஈரல் போன்றவை அகற்றியெடுக்கப்பட்ட பின் அவர்களது உடல் கள் பொலநறுவையிலுள்ள பாரிய பிரேத அறை யொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின் மலையகம் நோக்கிச் செல்கின்ற பார ஊர்திகளில் ஏற்றி அனுப்பப்படுவதாக கடந்தவாரம் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம்.
ஆனால் அச்செய்தி உண்மையல்ல என்றும். அதில் நாம் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் உண்மையல்லவென்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அச் செய்தி தொடர்பில் எமக்கு அச்செய்தியை வழங்கிய செய்தித் தொடர்பாளருடன் தொடர்புகொண்டோம். இந்திய தொலைபேசி எண்ணி்ல் இருந்து அழைப்பொன்று தனக்கு வந்ததாகவும். அச்செய்தியும் படமும் தனக்குக் கொடுக்கப்பட்டு அதைப் போடும்படி கேட்டுக்கொண்டதாகவும். அவர் தெரிவித்தார். தூரதிஸ்டவசமாக அத் தொலைபேசி இலக்கத்தையும் அவர் தவற விட்டிருந்தார்.
ஆனால் இதுதொடர்பாக நாம் ஆராய்ந்தபொழுது உண்மையில் அவ்வாறான சம்பவங்கள் சில பொலநறுவையி்ல் இடம்பெற்று வருவதாகவும் அச்செய்தி உண்மையானது எனவும் சில நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தவறுதலான படம் ஒன்றை நாம் வெளியிட்டமைக்காக வருந்துவதுடன் இவ்வாறான விஷமிகளின் செயற்பாடுகளுக்கு இனி நாம் துணைபோகப்போவதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அச்செய்தி தொடர்பான முழு உண்மையான விபரத்தையும் மிக விரைவில் ஆதாரங்களுடன் தர முயற்சிக்கின்றோம். (meenagan)

Saturday 2 May 2009

கடைகளைப் பூட்டினால் கொலைகள் தொடரும்!! இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை!!

மட்டக்களப்பில் கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட 8 வயதான சதீஸ்குமார் தினுஷிகாவின் கொலையைக் கண்டித்து மட்டக்களப்பு மக்கள் மூன்றுநாளைக்கு ஹர்த்தாலொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இன்றுமுதல் மூன்று நாளைக்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முடிவாகியிருந்தவேளை இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் மிரட்டப்பட் டுள்ளதாக வர்த்தகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். மாலை 6 மணியளவில் மட்டக்களப்பை கதிகலக்கிவரும் மோட்டார் சைக்கிள் குறூப் பான அப்பாச்சி குறூப் ரோந்து வந்ததாகவும் இவர்களுடன் இராணுவ புலனாய்வுப்பிரிவினரின் முகாமிலிருந்து பள்சர் மோட்டார் சைக்கி ளொன்றில் வந்த இருவர் கடைகளுக்குள்ளிருந்த சில வர்த்தகர்களை வெளியே அழைத்து யாராவது கடைகளை மூடினால் இந்தச் சிறுமிக்கு நடந்ததைப்போன்று தொடர்ந்து நடக்கும் என தமிழில் எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் சிறுமி தினுஷிகாவின் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கும் முக்கிய கொலையாளியான புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ரதீஸ்குமார் என அடையாளம் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இவர்கள் முற்றாக மூடிமறைக்கப் பட்ட தலைக்கவசம் அணிந்து வந்ததாகவும் இவர்களின் நடவடிக்கைகளை வைத்து ஒருவர் ரதீஸ்குமாராக இருக்கலாம் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.