Tuesday 12 May 2009

தவறுக்கு வருந்துகின்றோம்.!!

வுனியா, புதுக்குடியிருப்பு, மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களிலுள்ள நலன்புரி முகாம்களிலிருந்து கடத்திக்கொண்டு செல்லப்படும் தமிழ் இளைஞர், யுவதிகளைக் கொன்று அவர்களது உடல் உறுப்புக்களான இருதயம், கண்கள், சிறுநீரகம், ஈரல் போன்றவை அகற்றியெடுக்கப்பட்ட பின் அவர்களது உடல் கள் பொலநறுவையிலுள்ள பாரிய பிரேத அறை யொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின் மலையகம் நோக்கிச் செல்கின்ற பார ஊர்திகளில் ஏற்றி அனுப்பப்படுவதாக கடந்தவாரம் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம்.
ஆனால் அச்செய்தி உண்மையல்ல என்றும். அதில் நாம் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் உண்மையல்லவென்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அச் செய்தி தொடர்பில் எமக்கு அச்செய்தியை வழங்கிய செய்தித் தொடர்பாளருடன் தொடர்புகொண்டோம். இந்திய தொலைபேசி எண்ணி்ல் இருந்து அழைப்பொன்று தனக்கு வந்ததாகவும். அச்செய்தியும் படமும் தனக்குக் கொடுக்கப்பட்டு அதைப் போடும்படி கேட்டுக்கொண்டதாகவும். அவர் தெரிவித்தார். தூரதிஸ்டவசமாக அத் தொலைபேசி இலக்கத்தையும் அவர் தவற விட்டிருந்தார்.
ஆனால் இதுதொடர்பாக நாம் ஆராய்ந்தபொழுது உண்மையில் அவ்வாறான சம்பவங்கள் சில பொலநறுவையி்ல் இடம்பெற்று வருவதாகவும் அச்செய்தி உண்மையானது எனவும் சில நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தவறுதலான படம் ஒன்றை நாம் வெளியிட்டமைக்காக வருந்துவதுடன் இவ்வாறான விஷமிகளின் செயற்பாடுகளுக்கு இனி நாம் துணைபோகப்போவதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அச்செய்தி தொடர்பான முழு உண்மையான விபரத்தையும் மிக விரைவில் ஆதாரங்களுடன் தர முயற்சிக்கின்றோம். (meenagan)

No comments: