Friday, 20 March 2009

மட்டக்களப்பில் மூடப்பட்டுவரும் துணை ஆயுதக் குழுக்களின் முகாம்கள்.

















ட்டக்களப்பில் பிள்ளையான் குழுவினருக்கு எதிராக கருணாகுழுவினரின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பிள்ளையான் குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளியேறி வருகின்றனர். நேற்று மட்டும் பிள்ளையான் குழுவினரின் மூன்று முகாம்கள் மூடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு தாமரைக் கேணியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையான் குழுவினரின் மருத்துவப் பிரிவினரின் முகாம், புகையிரத நிலைய விதிச் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த முகாம் , மற்றும் தேற்றாத்தீவிலிருந்த கருணாகுழுவினர் முகாம்களே இவ்வாறு மூடப்பட்டவையாகும். இவை மட்டக்களப்பு தாமரைக்கேணியில் 8 உறுப்பினர்களுடன் பிள்ளையான் குழு முக்கியஸ்தரான சீலனின் தலைமையில் இயங்கி வந்த முகாமும், மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதிச்சந்தியில் பிள்ளையான் குழு முக்கியஸ்தரான யூட்டின் தலைமையில் இயங்கி வந்த 15 பேரைக் கொண்ட முகாமும் நேற்று முடப்பட்டது. இவற்றுடன் நேற்று தேற்றாத்தீவிலுள்ள கருணா குழு முக்கியஸ்தர் வீராவின் தலைமையில் 8 பேரைக் கொண்ட முகாமும் மூடப்பட்டது.
இம்முகாம்களிலிருந்த பெயர் பலகைகள் மற்றும் தளபாடங்கள் என்பவற்றை இம்முகாமில் இருந்தவர்கள் அடித்து நொறுக்கிய பின்னர் வெளியேறிச் சென்றுள்ளனர். தாமரைக் கேணியிலுள்ள பிள்ளையான் குழுவினரின் அலுவலகம் தொடர்ந்து இயங்கி வருவதாகக தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்த கருணா குழுவினரின் முகாம்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களாக மாற்றப்பட்டு வருவதுடன் அப்பிரதேசங்களிலுள்ள வர்த்தகர்கள் தமக்கு ஒத்துழைக்குமாறு கருணா குழுவினரால் கேட்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: