திருக்கோணமலையில் கடந்த புதன் கிழமை கடத்திச் செல்லப் பட்டு கொலை செய்யப்பட்ட யூட் ரெஜி வர்சாவின் இறுதி சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இக் கொலைச் சம்ப வத்தில் காவற்துறையினரால் கைது செய்ப்பட்ட சந்தேக நபரான மேர்வின் டியூரின் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோனைக்காக திருக்கோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் கடற்கரை காவல் சோதனைச்சாவடிக்கு முன்னால் காவற்துறையினரின் கழுத்தை நெரிக்க முற்பட்ட போது அருகில் இருந்த காவற்துறையினரால் சுடப்பட்டார்.
இச்சம்பவம் மதியம் 12.15 மணியளவில் நடைபெற்றது. சுடப்பட்டவர் 25 வயதுடையவர் எனவும், இவர் திருக்கோணமலை புல்மோட்டை வீதியில் ஆனந்த புரி என்னும் இடத்தில் வசிப்பவர் என்றும் சொல்லப்படுகின்றது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 5 பேர் திருக்கோமணலை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கருணா அமைப்பின் திருக்கோணமலை பொறுப்பாளர் ஜனார்த்தனும் கைது செயப்பட்டவர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவரிடம் இருந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை காவற்துறையினர் தேடிவருகின்றனர். காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவரான மேர்வின் என்பவருக்கும் கருணா அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதேவேளை இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஒரு மாதத்துக்கு மேல் வர்ஷாவுக்கு கணனி கற்பிப்பதற்கு என்று வீட்டுக்கு சென்று வந்த இளைஞர்; உள்ளடங்குவதாகவும் சிறுமியின் உறவினர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இச்சிறுமியின் கொலை தொடர்பான வைத்திய பரிசோதனையின் பின் வர்ஷாவின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் வாய்க்குள் துணிகள் திணிக்கப்பட்டு பிளாஸ்டரால் ஒட்டப்பட்டிருந்தாகவும் காவற்துறை அதிகாரி வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இக்கொலை தொடர்பான முக்கிய சந்தேக நபர், கணனி பயிற்றுவிப்பாளரும் சிகரம் இணைய வானொலி நடத்துனர் என்பதும் தெரிய வந்த நிலையில் சிகரம் பணிப்பாளர் என அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஊடகவிய லாளருக்கான அடையாள அட்டையும் கைப்பற்றியுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை சிவன் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இவரது இணைய வானொலிச் சேவை மூலம் சிறுவர்களது நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளதாகவும், செயற்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.
தனது வானொலியை விரிவுபடுத்துவதற்காகவே தாம் குழந்தையைக் கடத்தி கப்பம் கேட்டதாக அவர் காவற்துறையினருக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கருணா அணி முக்கயஸ்த்தர் ஜனார்த்தனனுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர் எனவும் திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்படவர்களில் மற்றுறொரு இளைஞர் திருகோணமலை காவற்துறைத் தலைமையகத்தின் பெண் காவற்துறைச் சிப்பாய் ஒருவரின் மகன் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 11 ஆம் திகதி பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார். பின்னர் இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது 10 இலட்சம் ரூபாவை கொடுத்து சிறுமியை மீட்க தாய் தயாரான போது சிறுமி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment