இன்று இரவு 8.15 மணியளவில் கல்முனையில் கருணா குழுவினரால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கல்முனையிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் நான்கு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய அழகேந்திரன் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இன்று இரவு 8.00 மணியளவில் கல்முனை பற்றிமா கல்லூரிக்கு பின்புறமுள்ள இவரது வீட்டிற்கு வந்த கருணாகுழுவைச் சேர்ந்த நால்வர் இவருடன் இருந்து உரையாடிவிட்டு போகும் போது பிஸ்டலால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். சுட்டுக்கொல்லப்பட்டவருக்கும் கருணாவின் வலதுகையான இனியபாரதிக்கும் இடையில் கென்ராக்ட் விடையமாக முறுகல்நிலை நிலவி வந்ததாகவும். அம்பாறை மாவட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இனியபாரதியின் விசுவாசியான சசிகரன் என்பவரூடாகவே இவர் கென்ராக்ட் செய்து வந்ததாகவும். சிலகாலமாக அழகேந்திரன் தனித்து செயற்பட்டு வந்ததால் இது இனியபாரதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு தடவைகளுக்குமெல் இவர் அச்சுறுத்தப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றவர்கள் தாழவெட்டுவான் சந்தியில் அமைந்துள்ள கருணாகுழுவினரின் முகாமுக்குள் சென்றதாகவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது. இவரது மனைவியான றாஜினி முன்னாள் தபாலதிபராவார். இவர் தற்பொழுது அழகுக்கலை நிலையமொன்றை நடாத்திவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment