Tuesday, 17 February 2009

செஞ்சிலுவைச்சங்க தலமையகத்தை தாக்கியது துமிந்த குழுவினரே!! வெளிவந்துள்ள உண்மைத் தகவல்!!

கடந்த 07-02-2009 வெள்ளிக்கிழமை அன்று பம்பலப்பிட்டியி லுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் தலமைக் காரியலயம் மீது இளைஞர் குழுவொன்றினால் காடைத்தனமான தாக்குத லொன்று இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. சிறீலங்கா சுதந்திர கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினரா ன துமிந்த சில்வாவும் அவரது குழுவினருமே இத்தாக்குதலை மேற்கொண்டிருந்ததாக தற்பொழுது தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற அன்று வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி இந்து மகளிர் கல்லூரிக்கு முன்னால் ஈபிடிபியின் ஆதரவுடன் செயற்பட்டுவரும் மாணவர் அமைப்பான சுதந்திர மாணவர் முன்னணியின் உண்ணாவிரத போராட்டமொன்று இடம்பெற் றது. வன்னியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்ககோரி நடாத் தப்பட்ட இவ் உண்ணாவிரதத்தில் ஈபிடிபியின் ஆதரவாளர்கள் சிலரும், பாடசாலைமாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் பங்குபற்றினர். அரசாங்கத்துக்கு சார்பாகவோ புலிகளுக்கு சார்பாகவோ இல்லாமல் பொதுவான முறையில் இவ் உண்ணாவிரதம் நடாத்தப்பட்டது. புலனாய்வுப்பிரிவினரும் பொலிஸாரும் சுற்றிவர கடமையிலீடு படுத்தப்பட்டிருந்தனர். உண்ணாவிரதத்தின் முடிவில் மாலை 5 மணியளவில் அருகிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்துக்குச் சென்று மகஜர் ஒன்றும் கையளிக்க ஏற்பாடாகியிருந்தது.
சுமார் 11 மணியளவில் அவ்விடத்திற்கு வந்த மேர்வின் சில்வாவும் குழுவினரும் ஏதோ அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்மொன்று நடப்பதாக நினைத்து குழப்ப முயன்ற வேளை உடனடியாக இந்தவிடையம் ஈபிடிபியின் தலமைக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து. உயர்மட்டத்தினர் மேர்வின் சில்வாவுடன் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து மேர்வின் சில்வாவும் அவருடைய குழுவினரும் ஆர்ப்பாட்டமில்லாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றனர்.
ஆனால் தனது சிஷ்யனும் ஓரினச்செய்கையாளனுமான துமிந்த சில்வாவுக்கு இதுபற்றி தொலைபேசி மூலம் அறிவித்த மேர்வின் எதாவது பார்த்து செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறார். சுமார் 12 மணியளவில் அவ்விடத்திற்கு வந்த துமிந்தவும் சுமார் 30பேர்கொண்ட கட்டுமஸ்தான சிங்களக் காடையர்களும் உண்ணாவிரதத்தைக் குழப்ப முற்பட்ட வேளை அங்கு நின்ற ஈபிடிபியினரின் புலனாய்வுப்பிரிவினர் இப்போராட்டம் பற்றியும் பின்னணியில் ஈபிடிபியினரே உள்ளதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து அவ்விடத்தைவிட்டு இவர்கள் அகலமுற்பட்டவேளை. துமிந்தவுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. அந்த தொலைபேசி அழைப்பை எடுத்தவர் யாரென்று தெரியவில்லையாயினும் டக்ளஸ் தேவானந்தாகவொ அல்லது மேர்வின் சில்வாகவோ இருக்கக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து துமிந்த குழுவினர் அவ்விடத்தைவிட்டு அகன்று கால்நடையாகவே சென்றனர். அவ் இடத்தில் நின்ற ரூபவாகினியின் வீடியோ படப்பிடிப்பாளர் ஒருவர் இவர்களை ஒடிச்சென்று படம்பிடிக்கச்சென்றவேளை இவரை மிரட்டிய துமிந்த குழுவினர் “செஞ்சிலுவைச் சங்கத்திற்கு போகின்றாம் முடிந்தால் அங்குவந்து எடுடா நாயே” என்று மிரட்டிவிட்டுச் சென்றனர். செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சுமார் 12.45 மணியளவில் சென்ற இவர்கள் முன்னால் கோசங்களை எழுப்பியவாறு கற்களாலும் கட்டைகளாலும் ஜன்னல்களையும் கதவுகளையும் அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஊடகவியலாளர் ஒருவரே இதுபற்றி எமக்குத் தெரிவித்தார். இதனால் அங்கிருந்த மாணவர்கள் சிலரும் அரைவாசியுடன் எழுந்து சென்றதைத் தொடர்ந்து அன்றைய உண்ணாவிரதபோராட்டம் நண்பகல்வேளையிலேயே முடிக்கப்பட்டது.

1 comment:

ttpian said...

more than 95% of tamil people in tamilnadu are with tigers:let tigers make BIG assault on SLA:
Tigers will win!
we will formate Tamileelam!
k.pathi
karaikal