Sunday 11 January 2009

லசந்தவின் கொலையின் பின்னணியில் கருணா…!! தப்பிய தமிழ் ஊடகவியலாளர்..!!


சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் கருணா உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதபற்றி மேலும் தெரியவருவதாவது.

கடந்த டிசம்பர் 31 ஆம்திகதி இரவு தன்னுடைய காதலியுடன் பெந்தொட்டையில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு பிரபல கோட்டலில் கருணா உல்லாசமாக இருந்ததாக பிரபல ஆங்கிலத் தினசரியான சண்டே ஐலண்ட் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை 04-01-2009 அன்று வெளியாகியிருந்தது. இச்செய்தி வெளியாகி 4 நாட்களில் அதாவது 08-01-2009 அன்று லசந்த சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி புத்தாண்டு பிறப்பதற்கு சில சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பெந்தோட்டை கடற்கரையில் தனது காதலியுடன் செல்லமாக விளையாடிக் கொண்டிருந்த கருணாவை லசந்த தனது புதிய மனைவியுடன் அங்கு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த பொழுது தற்செயலாக அவதானித்துவிட்டார். கருணாவின் புதிய காதலி பெரதெனியா பல்கலைக்கழக மாணவி என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

கருணா அவ்விடுதியில் காதலியுடன் இருந்ததை நேரடியாகக் கண்டவர்கள் இருவர். ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. மற்றையவர் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர். அவர் லசந்தவின் நண்பரும் கூட. கருணாவிற்கு ஏற்கனவே லசந்தவை தெரியும். ஆனால் தமிழ் ஊடகவியலாளரைத் தெரியாது. எனவே நைசாக அவ்விடத்திலிருந்து விலகிய அவர் வேறு ஒரு இடத்திலிருந்து நடப்பதை அவதானித்திருக்கிறார்.

லசந்தவை கண்ட கருணா தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டு லசந்தவைப் பார்த்து அசட்டு சிரிப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தபோது விசயமறியாத இவரது காதலி இவரது தோளைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டிருக்கிறார். இதனால் சற்றுக் கோபமடைந்த கருணா அவரைத் தட்டி தள்ளிவிட்டிருக்கிறார். அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த பலர் இவரை அடையாளங்கண்டு நாங்கள் இங்கிருந்தால்; கருணாவைக்; குறிவைத்து பாயும் தற்கொலை குண்டுதாரிகளுக்கு; பலியாகிவிடுவோம் என்று தமது மனைவி மக்களுடன் அவசரஅவசரமாக ஓட்டலிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.

லசந்த தனது அந்தரங்கத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்துவிடுவார் எனப் பயந்த கருணா நீண்ட நேரமாக அவருடன் உரையாடிவிட்டு இரவோடிரவாக ஹோட்டலை விட்டு புறப்பட்டுள்ளார். அன்றிலிருந்து எட்டாவது நாள் லசந்த சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

இதேவேளை லசந்த தனது நண்பரான தமிழ் ஊடகவியலாளரிடம் கருணா இங்கு உல்லாசமாக இருந்த விடையத்தை எப்படியாவது வெளியுலகிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் கூறியிருக்கிறார். எனவே இந்தக் கொலையின் பின்னணியில் கருணாவே இருக்கக்கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

Unknown said...
This comment has been removed by the author.