Sunday, 16 November 2008

கருணாவின் அடுத்த குறி ஆசாத் மௌலானாவா?

கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையில் பிளவு உண்டாகியபோது ரி.எம்.வி.பி.யின் கட்சியிலிருக்கும் ரகு விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக கருணா அறிக்கைகளுடாக தெரிவித்திருந்தமை தெரிந்ததே.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிள்ளையானின் வேண்டுகோளுக்கமைய ரி.எம்.வி.பி. கட்சியை தன்னுடைய பெயரில் பதிவு செய்த ரகு என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபன் தானே கட்சியின் தலைவரென்றும் கருணாவிற்கு இது தொடர்பாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் அறிவித்திருந்தார்.
இதேவேளை ரி.எம்.வி.பி.யின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா கருணாவை கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக அறிவித்திருந்தார். இதை பல ஊடகங்களும் அவரது குரலை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டிருந்தன. எனவே கருணாவின் அடுத்தகுறி ஆஸாத் மௌலானா வாக இருக்கலாம் என பிள்ளையான் குழுவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

அம்புலிமாமி said...

கருணாவின் அடுத்த குறி யாராகவும் இருக்கட்டும். அதற்குமுதல் பிள்ளையான், கருணாவினை போடப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல் ஒன்று.