
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்ததனால்பிள்ளையானின் பிரத்தியேக செயலாளரான ரகு பிள்ளையானையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் பிள்ளையான் குழுவின் பேச்சாளரான அசாத்மௌலானாவின் காரில் பாராளுமன்றத்தில் இறக்கிவிட்டு கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வேளையில் பிள்ளையான், ஜனாதிபதியின் சகோதரரான ப~pல்ராஜபக்ஸவுடன் கிழக்கில் பொலிஸ் நிர்வாகம் அமுல்படுத்துவது தொடர்பாக உரையாடிக் கொண்டிருந்திருக்கின்றார்.
அத்துகிரியவிலுள்ள ஒருவல பிரதேசத்தினூடாக கொழும்பை நோக்கி காரில் ரகு சென்றுகொண்டிருக்கும் பொழுது அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவச் சீருடை தரித்த ஒருவர் இவரது காரை மறித்து உரையாடிக்கொண்டிருந்ததாக அப்பிரதேச தகவலொன்று தெரிவிக்கின்றது.
இதன்பொழுது வெள்ளைநிற டொல்பின் வானில் சகாக்கள் இருவருடன் வந்த இனியபாரதி மைக்றோ பிஸ்ரலினால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளர். இவருடன் கொழுப்பில் பல கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள கருணா குழுவின் முக்கிய உறுப்பினராக கலை என்பவரும் உடனிருந்திருக்கின்றார்.
இச்சம்பவம் முற்பகல் 11:30 மணியளவில் இடம்பெற்றது. ஆனால் 11.40 மணியளவில் பாராளுமன்றத்துக்குள்ளிருந்த கருணாவுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததாக எமக்கு நம்பகத்தன்மையான தகவலொன்று கிடைத்திருக்கின்றது. சில நிமிடங்களே உரையாடிவிட்டு மெல்லிய முன்புறுவலுடன் தொடர்பை கருணா துண்டித்ததாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது.
ஆனால் ரகுவை மறித்து அவருடன் உரையாடிக்கொண்டிருந்த நபர் யார் என்து பற்றி இன்னும் தெரியவரவில்லை. அவர் உண்மையிலேயே இராணுவத்தை சேர்ந்தவரா இல்லை கருணா குழுவைச் சேர்ந்தவரா என்பது பற்றி அறியமுடியவில்லை.
வழமையாக பாராளுமன்ற கூட்டத்தொடர்களின்போது கருணாவின் முக்கிய வலதுகையும் ஜனாதிபதியின் அம்பாறைமாவட்ட இணைப்பாளரும், கிழக்கில் இடம்பெற்றுவரும் பல கொலைகளின் சூத்திரதாரியுமான இனியபாரதி கருணாவுடன் கூடவே இருந்திருக்கின்றார்.
ஆனால் சம்பவம் நடந்த அன்றுமட்டும் இனியபாரதி கருணாவுடன் கூட இருக்காதது அங்கிருந்தவர்களுக்கு பலத்த சந்தேகத்தை உண்டுபண்ணியிருக்கின்றது. இந்த வேளையிலேயே இனியபாரதியே நேரடியாக நின்று ரகுவை சுட்டுக் கொலைசெய்ததாக எமக்குக் கிடைத்த புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment