கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு அலுவலகங்களையும் பிள்ளையானின் கைகளில் இருப்பதால் ஆத்திரமடைந்த கருணாகுழுவினர் மீனகத்தை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவெடுத்தனர். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது அங்கு ரி.எம்.வி.பியின் உத்தியோககபூர்வ பத்திரிகையான தமிழ்அலை பத்திரிகை இயங்கி வந்ததுடன் அண்மைக்காலமாக இது பிள்ளையானின் ஊதுகுழலாகவும் மாறிவிட்டிருந்தது. எனவே இந்த பத்திரிகை அலவலகத்தை கைப்பற்றுவதன் மூலம் கருணாவின் ஊதுகுழலாக இதனை மாற்றி மக்கள் மத்தியில் கருணாவுக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதும் ஒரு காரணம்.
இவற்றை கருத்திற்கொண்டே இந்த அலுவலகத்தினுள்ளே நேற்று முன்தினம் திடீரென கருணா குழுவினர் உட்புகுந்து அங்கிருந்த பிள்ளையான்குழு உறுப்பினர்களை நையப்புடைத்ததுடன் அலுவலகத்தை கைப்பற்றி தமது கட்டுப்பர்டில் கொண்டுவந்ததுடன் பத்திரிகை அச்சகத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
No comments:
Post a Comment