
கொக்கட்டிச்சோலையில் அமைந்திருந்த மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இப்பத்திரிகைக் காரியாலயம் இயங்கி வந்தது. பின்னர் கருணா பிரிந்த பின்னர் இதே பெயரை வைத்து மட்டக்களப்பு லேக்வீதியில் அதாவது தேனகத்திலிருந்து (இது கோவிந்தன் விதியில் மீனகம் அலுவலகத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது) இதனை வெளியிட்டு வந்தனர்.
கருணா லண்டன் சென்றதும் இப் பத்திரிகை பிள்ளையானின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அன்றிலிருந்து இதில் வெளிவரும் செய்திகள்இ ஆக்கங்கள் அனைத்தும் பிள்ளையானை மையமாக வைத்தும் அவருக்கு புகழ்மாலை சூடியும் வெளிவந்தன. மாகாணசபைத் தேர்தலுக்கு இந்தப் பத்திரிகையை பிள்ளையான் தன்னுடைய பிரச்சார ஊதுகுழலாக பயன்படுத்தியிருந்தார்.
மீண்டும் கருணா நாடு திரும்பியதைத் தொடர்ந்து வெலிகந்தையிலும் மற்றும் சில இடங்களிலும் தமது உறுப்பினர்களுடன் கலந்துரையடல்களை மேற்கொண்டிருந்தார். பல அமைச்சர்களையும் சந்தித்திருந்தார். ஆனால் இது தொடர்பான செய்திகள் அரசாங்க ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்தாலும். தமிழலை பத்திரிகை இச்செய்திகளை மட்டுப்படுத்தியே வெளியிட்டிருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. இப்பத்திரிகை பிள்ளையானின் மேற்பார்வையில் இருந்ததாலும் கருணாவின் செய்திகளையம் படங்களையும் வெளியிட்டால் தன்னுடைய பதவிக்கு ஆபத்து நேரலாம் என்பதாலும் கருணா மீது பற்று ஏற்பட்டு தனது ஆதரவாளர்கள் தன்னைவிட்டு சென்று விடுவார்களோ என்ற பயத்தினால் பிள்ளையான்இ கருணா தொடர்பான செய்திகளை மட்டுப்படுத்தி வெளியிட அனுமதித்ததாகவும் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கருணா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிகழ்வு தொடர்பான படங்களும் செய்திகளும் இப்பத்திரிகை அலுவலகத்துக்கு கருணாகுழுவினரால் வெளியீட்டுக்காக கொடுக்கப்பட்டிருந்தன. மேற்படி தமிழ் அலை பத்திரிகையின் அலுவலக நிர்வாக பீடத்தை சேர்ந்த பிள்ளையான் குழு உறுப்பினர்கள். கருணா குழுவினரால் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டுப்படுத்தியதுடன் அண்மையில் பிள்ளையானால் திறந்து வைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைகள் தொடர்பான செய்திகளையும் படங்களையம் முன்னுரிமை கொடுத்து பிரசுரித்திருந்தனர். இதன்காரணமாக ஆத்திரமடைந்த கருணாகுழு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் திடீரென இவ் அலுவலகத்துக்குள் உட்புகுந்து அச்சக சாதனங்களையும் மீனகம் அலுவலகத்தையும் தமத கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.
No comments:
Post a Comment