Monday, 7 February 2011

வந்தாறுமூலையில் 1 பொதியில் 7 பேர் உண்ணும் அவல நிலை

வந்தாறுமூலையில் வெள்ளத்தினால் பாதிக் கப்பட்டு நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள், ஒரு உணவுப் பொதியில் 7 பேர் உண்ணும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள் ளதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு மாவட் டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நிலை யில் உள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் மக்கள் தமக்கு இதுவரை எதுவித உணவுப் பொருட்களும் வழங்கப்பட வில்லையென தெரிவித்தனர்.

வந்தாறுமூலை மேற்குப் பிரதேசத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த வெள்ளம் காரணமாக பலத்த பாதிப்புகளை சந்தித்துள்ள போதிலும் இதுவரையில் எதுவித நிவாரணமும் தமக்கு வழங்கப் படவில்லையென கவலை தெரிவிக்கின்றனர்.

தமது குழந்தைகளுக்கு பால்மா கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலையிலேயே தாம் உள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நிவாரணம் வழங்கும் அரசியல்வாதிகள் பிரதான வீதிகள் மற்றும் வெள்ளப் பாதிப்புகள் குறைந்த பகுதிகளில் நிவாரணங்களை வழங்கிவிட்டு செல்வதாகவும் தமக்கு எதுவித நிவாரணமும் கிடைப்பதில்லையெனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த போது வெளியேற முடியாமல் வீட்டில் பரண் அமைத்து தங்கியிருந்ததாக தெரிவிக்கும் இந்த மக்கள் தாம் ஓரளவு நீர் வற்றிய பின்பே வெளியேறி முகாம்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதாகவும் தெரி விக்கின்றனர்.

எனினும் தங்களை வந்து பார்த்து உணவுகளை பெற்றுக்கொடுக்க எந்த அதி காரிகளும் முன் வரவில்லையெனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் தமது வீடு தேடிவந்து வாக்கு கேட்கும் அரசியல் வாதிகள் தம்மை மறந்தது தொடர்பில் எதிர்காலத்தில் தகுந்த பாடம் புகட்டப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

1 comment:

aaradhana said...

SUPER ARTICLE
https://www.youtube.com/edit?o=U&video_id=ybTW6PaPhLo