மட்டக்களப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கோட்டை முனை கனிஷ்ட வித்தியாலய பாடசாலை வாயிலில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட மூன்றாம் ஆண்டு மாண வியான சதீஸ்குமார் தினுஷிகா (வயது8) நேற்றுகாலை பாடசாலையிலிருந்து 300 மீற்றர் தூரத்திலுள்ள வள வொன்றினுள் பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து சடல மாக மீட்கப்பட்டுள்ளார். இவரது கடத்தல் தொடர்பான செய்திகள் மர்மமாகவே இருந்தாலும். எமது செய்திச் சேவைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. உடற்பயிற்சி ஆசிரியரான இவரது தந்தையார் சதீஸ்குமார் காந்திராஐ 2002 ஆம் ஆண்டு இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டிருந்தார். தற்பொழுது பிள்ளையானின் வலதுகையான சீலன் அப்பொழுது இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார். இவரே இச்சிறுமியின் தந்தையின் கடத்தலில் முக்கிய பங்கு வகித்திருந்தார். பின்னர் கருணா குழுவி னரிடம் ஒப்படைக்கப்பட்டு சீலனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட மகள் தினுஷிகா நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டார். இவரது கண்கள் இரண்டும் தோண்டப் பட்டிருந்ததாகவும், அடி வயிற்றில் கீறல் போன்ற அடையாளம் காணப்பட்டதாகவும் நேரில் பார்த்த எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். சில வேளைகளில் இவரது கண்களும், சிறுநீரகமும் அகற்றப்பட்டிருக்க வாய்ப்புக்களும் உள்ளன. எனினும் இச்சிறுமி கடத்தப் பட்டவுடன் 30 இலட்சம் ரூபா கப்பமாகக் கேட்கப் பட்ட தாகவும். இவரது வீட்டார் சம்மதம் தெரிவித்து நேற்றுக்காலை அப்பணத்தை கொடுப்பதற்குறிய ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த வேளையிலே இவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப் பட்டிருந்தார். எனினும் கடந்த செவ்வாய்க் கிழமை இவர் கடத்தப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய பாடசாலை வாயிலில் சந்தேகத்திற் கிடமான இருவர் நடமாடியதாகவும் அப்பொழுது அவ்வழியால் வந்த பொலி ஸாரின் ஜீப்பிற்குள் இருந்த ஒருவருக்கு இருவரும் கைகாட்டிவிட்டு நின்றதா கவும் அப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தகவல் தந்துள்ளார்.
இச்சிறுமியின் கொலையில் முக்கிய கொலையாளியாக இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கந்தசாமி ரதீஸ்குமார் சம்பந்தப்பட்டிருப் பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை இச்சிறுமி யின் குடும்பத்தவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சிறுமி யின் தந்தை கடத்தப்பட்ட பின்னர் அடிக்கடி விசாரணைக்கென இவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்து சென்றதாக தகவலொன்று தெரிவிக்கின்றது. கடந்தவருடம் இச்சிறுமியில் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் இருந்த தபாலதிபாரான சுஜி என்பவரின் கடத்தலிலும் ரதீஸ்குமாரும், சீலனும் சம்பந்தப்பட்டிருந்தனர். இவர் முன்னர் இராணுவப் புலனாய்வுப்பிரிவின் முக்கியஸ்தர் களான புளொட் மோகனுடனும், நிஷாம் முத்தலிப்புடனும் சேர்ந்து இயங்கியவர். மட்டக்களப்பில் அதிகமான இளைஞர்கள் காணாமல் போனதுக்கும், படுகொலை செய்யப்பட்டமைக்கும் இவர்களும் காரணமாக இருந்தனர். புளொட் மோகனும், நிஷாம் முத்தலிப்பும் தற்பொழுது உயிருடன் இல்லாததனால் ரதீஸ்குமார் இராணுவ புலனாய்வுப் பிரிவில் முக்கிய பதவியொன்றில் இருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர் கருணா குழு முக்கி யஸ்தர்களுடனும், பிள்ளையான் குழு முக்கியஸ்தர் களு டனும் மிக நெருக்கமாக உறவுகளைப் பேணிவரு கின்றார். புலனாய்வுப் பிரிவில் வேலை செய்கின்ற சில இளைஞர் களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காகவே பணம் தேவைப்படுவதாக தொலைபேசி மூலம் இவர் கேட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment