Monday, 27 April 2009

உற்றுப்பாருங்கள்!!

இந்தப் புகைப்படத்தை உற்றுப்பாருங்கள். இது கடந்த 21ஆம்திகதி வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து புதுமாத்தளன் பிரதேசத்திற்கு வந்துசேர்ந்த மக்கள் வெற்றுத் தரையில் அமர்ந்திருப்பதையும் அவர்களைச்சுற்றி முட்கம்பிவேலிகள் சுற்றப்பட்டிருப்பதையும். சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், வயதுவந்தோர் என தனித்தனியாக பிரிக்கப்பட்டபின் சிறுவர்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டுசெல்வதற்காக காத்திருப்பதையும் தம்மிடமிருந்து பிரித்துச்செல்லப்பட்ட குழந்தைகளை ஏக்கத்துடன் பெற்றோர்கள் பார்ப்பதையும் இந்த படத்தில் காணக்கூடியதாகவிருக்கின்றது. இராணுவத்திலிருந்த ஒருவருடைய கையடக்கத் தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட இப்புகைப்படம் அவருடைய நண்பர் ஒருவர் மூலமாக எமக்குக் கிடைத்துள்ளது. என்னதான் பிரச்சாரங்களுக்காக புகைப்படம் எடுத்தாலும். உணர்வுகளும் ஏக்கங்களும் படத்தின் மூலமாக வெளிப்படுவதையும் உறங்காத உண்மைகளையும் மறைக்கமுடியாதல்லவா. முகாம்களையும் காவலரண்களையும் சுற்றி அமைக்கப்பட்ட முட்கம்பிவேலிகள் இன்று எமது மக்களை சுற்றி அமைக்கப்பட்டிருக்கின்ற கொடுமை இது. எதுவுமே செய்யமுடியாத நிலையில் தமது பிஞ்சுகள் பிரிந்து செல்வதை கண்ணீருடன் மட்டுமே பார்க்க முடிகின்றது.

No comments: