வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் நலன்களை கவனிப்பதற்காக மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைமைப் பொறுப்புக்கு முன்னாள் யாழ்குடா இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு உதவியாக வவுனியா மாவட்ட அரசாங்கஅதிபர் திருமதி.சார்ள்ஸிம் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கள இனவாத அரசின் இந்த நியமனம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்குடாவில் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி பதவி வகித்த காலத்தில்தான் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான இளம்பெண்கள் படையினரால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப் பட்டார்கள். ஆயிரக்கணக் கானவர்கள் காணாமல் போகவும் செய்யப்பட்டனர். 56 வயதுள்ள அவர் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி பிறந்தார். 1974ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி சேவையில் இணைந்து கொண்ட மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றார். தற்பொழு பலாலி கட்டளை தலமையகத்தின் யாழ்மாவட்ட கட்டளைத் தளபதியாக அவரது இடத்திற்கு ஏ மெண்டக்க சமரசிங்க நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2 வருடங்களுக்கு மேலாக குடாநாட்டில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறியின் பதவிக் காலத்தில் 2000 க்கும் அதிகளவான தமிழர்கள் காணமல்போன நிலையிலே கடந்த ஜனவரி ஓய்வு பெற்றார். ஆனால் அவர் தனது கொலைவெறித் தாகத்திலிருந்து இன்னும் ஓய்வு பெறவில்லையென்பது இடம்பெயர்ந்த மக்களுக்கான கண்காணிப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளதி லிருந்து தெட்டத் தெளிவாகப் புலனாகின்றது. எனவே மிச்சமிருக்கின்ற தமிழர்களில் எத்தனையோபேர் காணா மல்போகவும் படுகொலை செய்யப்படவும் வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் குடாநாட்டில் இராணுவப்புலனாய்வுப் பிரிவினரை யும், துணை ஆயுதக் குழுக்களையும் வளர்த்து அவர்களுடைய இச்சைக்கு பெருமளவான தமிழ் பெண்களை பலியாக்கிய பெருமை இவரையே சாரும். மிகவும் இரகசியமான முறையில் படுகொலைகளை நடத்தி முடிப்பதில் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி யாழ்குடாவில் பணியாற்றிய காலத்தில் செயற்பட்டவர். கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களை வைத்தே யாழ்குடாநாட்டி ல் இராணுவப்புலனாய்வுக் கட்டமைப்பை விஸ்தரித்து அதன்மூலம் பெருமள வான வர்த்தகர்களையும், மாணவர்களையும், இளைஞர் யுவதிகளையும் மற்றும் ஊடகவியலாளர்கள் கல்வியலாளர்கள் என பலரையும் கடத்திக் கொன்று குவித்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இதற்கும் மேலாக இந்திய புலனாய்வுப்பிரிவான றோவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி குடாநாட் டுக்குள் அவர்களை ஊடுருவ அனுமதித்ததுடன் ஆரிய குளம், சுழிபுரம், ஊரெழு, வரணி, மற்றும் “கிறீன் காம்ப்” என்றழைக்கப்படும் மனோகரா தியேட்டர் சந்தியில் அமைந்துள்ள இராணுவமுகாம்களில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் றோ மற்றும் அவர்க ளுடன் தொடர்புடைய முன்னாள் தமிழ் துணை ஆயுதக் குழு உறுப்பினர்கள் 75 பேரை தங்கவைத்து தமிழ் இளைஞர்கள் மீதான பாரிய களையெடுப்பை நடத்தியதுடன் பெருமளவான தமிழ்பெண்களும், பல்க லைக்கழக மாணவிகளும் சீரழிவதற்கும் காரணமாக இருந்தார். மகிந்தராஜபக்ச பதவி ஏற்றதன் பின்னர் யாழ்குடாவில் இடம் பெற்ற படுகொலைகள் எதற்கும் இதுவரை எந்தவொரு சாட்சியும் இல்லை என்பது இங்கு குறிப்பி டத்தக்கது. யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போதல்கள் கடத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தற்போதும் தேக்க நிலையிலேயே உள்ளன. ஆனாலும் இம்முறைப்பாடுகளில் பெருமள வானவை படையினராலே மேற்கொள்ளப்பட்டதாக பதியப்பட்டுள்ளமை மிகமுக்கியமான விடையமாகும் இந்நிலையில், ஏற்கனவே இடம் பெயர்ந்து வந்தவர்கள் பலர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என அரசாங்கம் குற்றம்சாட்டி வருகின்றது. அத்துடன், ஒரு இலட்சத்து 75 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், அவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்கள் யார், யார் என்பது இதுவரை வெளியுலகிற்கு இதுவரை தெரியாது. அவர்கள் தொடர்பான முழு விபரங்களை யோ, நலன்புரி முகாம்களின் எண்ணிக்கை களையோ அரசாங் கம் இதுவரை பூரணமாக வெளியிட வில்லை. இந்த நிலை யில் சந்திரசிறீயின் நியமனமானது தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குடாநாட்டில் இன்றும் மறைமுகமாக இயங்கி வரும் பல்வேறு சித்திரதை முகாம்கள் சந்திரசிறீயினால் நேரடியாக வழிநடத்தப்பட்டவையென்பது குடாநாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். கடத்தப்பட்டு பின்னர் திரும்பி வந்தவர்கள் கூட இம்முகாம் களைப் பற்றி தெரிவித்திருந்தார்கள். ஏற்கனவே திறந்தவெளிச் சிறைச்சாலையாக இருந்த யாழ் குடாநாட்டில் எத்தனையோ அட்டூழியங்களைப் புரிந்த சந்திரசிறீக்கு முட்கம்பிகளால் மூடப்பட்டுள்ள சிறைச்சாலைகளாக விளங்கும் நலன்புரி முகாம்கள் ஒன்றும் பெரிய விடையமல்ல. எனவே இனிவருங்காலங்களில் இந்த நலன்புரி முகாம்களில் இருப்பவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியான தொன்றாகவே இருக்கின்றது.
No comments:
Post a Comment