புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற படை யினர் மேற்கொண்டு வரும் பாரிய படை நகர்வு முயற்சி களுக்கு எதிராக தமிழீழ விடு தலைப் புலிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரு வதாக களமுனைச் செய்தி கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று நாட்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு பிரதான வீதியில் உள்ள இரட்டை வாய்க்கால் சந்திப் பகுதிதான் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைவதற்கான பிரதான பாதையாகக் கருதப்படுகின்றது. இந்தசந்தியை கைப்பற்றும் நோக்கில் படையினரின் 53, 58 ஆவது படை அணிகளும் 8 ஆவது சிறப்புப் படைப் பிரிவும் கடந்த மூன்று நாட்களாக பீரங்கிகள், கனரக சுடுகலன்கள் ஆகிய வற்றை பக்க பலமாகக்கொண்டு தக்குதல் களை மேற்கொண்ட வண்ணமிருப்பதாக வும் விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி பல முனைகளிலும் முறியடித்தும் வருவ தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இப்பகுதிகளில் புலிகள் ஏராளமான மிதிவெடிகளை விதைத்து வைத்துள்ளமையால் பெருமளவான படையினர் தமது கை, கால்களை இழந்துள்ளதாகவும் மிதிவெடிகளால் அவையங்களை இழந்த படையினர் பெருமளவில் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பிலுள்ள மலர்ச்சாலைகளில் கடந்த மூன்று நாட்களாக ட்ரக்குகளிலும் லொறிகளிலும் கொண்டுவரப்படும் படையினரின் உடல்கள் அதிகரித்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
1 comment:
your reporting is amasing...please continue!
Post a Comment