Tuesday, 3 March 2009

வெல்லாவெளியில் குடும்பப்பெண் கற்பழித்துக் கொலை!! அரங்கேறும் அதிரடிப்படையினரின் அராஜகம்.!!

களுவாஞ்சிக்குடி பகுதியில் வெல்லாவெளியிலுள்ள விவேகானந்தபுரம் பிரதேசத் தில் நேற்று இரவு விசேட அதிரடிப் படையினரால் குடும்பப் பெண்ணொருவர் ஈவிரக்கமின்றி கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்ப வம் பற்றி மேலும் தெரிய வருவதாவது.
விவேகானந்தபுர மாதர் சங்கத்தின் பொருளாளரான இப்பெண்ணின் வீட்டிற்கு இரவு 11 மணியளவில் சென்ற விசேட அதிரடிப் படையினர் இவரது கணவரான சிவகுமாரை கடுமையா தாக்கிய பின்னர் பற்றையொன்றுக்குள் தூக்கி வீசிவிட்டு. மேற்படி பெண்ணை கொடூரமாகக் கற்பழித்தக் கொலை செய்துள்ளனர். பின்னர் கம்பியொன்றில் இவரது உடலைக் கட்டி கிணற்றுக்குள் வீசிவிட்டு இவரிடமிருந்த மாதர் சங்கத்தின் பணமான 3 இலட்சம் ரூபாவையும் நகை களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
32 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாரான சிவகுமார் மகாதேவி என்பவரே கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார். இச்சம்பவத்தில் அதிரடிப் படையினரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு உணர்வற்ற நிலையிலிருந்த இவரது கணவன் தற்பொழுது களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட இவரது மனையியின் சடலம் தற்பொழுது களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ம் திகதி இதே பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமியின் வீட்டிலிருந்து இவரது வீடு 500 மீற்றர் தூரத்தில் உள்ளமை குறிப் பிடத்தக்கது. களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச் சைக்காக நேற்று முன்தினம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இச்சிறுமி நேற்று மாலை பொலநறுவை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இவரது தந்தையார் கட்டாரில் தொழில்புரிந்து வருகின்றார். மேலும் ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின் படி இவரது தாயார் கொல்லப்படவில்லை. நேற்று முன்தினம் காலை ஒன்றரை மணித்தி யாலங்கள் வெல்லாவெளி பொலிசாரினால் மட்டக்களப்பு வைத்திய சாலையில் வைத்து இச்சிறுமியும் சிறுமியின் தாயாரும் விசாரணைக் குட்படுத்தப்பட்டிருந்தனர் இதன்போது இவர்களிட மிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மட்டக்களப்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியான ரகுமான் என்பவர் கடந்த 2 நாட்களாக விடுமுறையில் நிற்பதாக தெரிவிக்கப் படுகின்றது. இதனால் இச்சிறுமியின் வைத்திய பரிசோதனை அறிக்கையை பெறமுடியாததால் நேற்றுமாலை இச்சிறுமி பொலநறுவை வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அழுத்தம் ஒன்றின் காரண மாகவே மேற்படி சட்டவைத்திய அதிகாரி மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்காது விடுமுறையில் நிற்பதாகவும் தகவலொன்று தெரிவிக்கின்றது.

1 comment:

ttpian said...

who will punish this racist gang?
is there any remedy?
other than crying,what we can do?
k.pathi karaikal
pathiplans@sify.com