Thursday 12 February 2009

புலிகளால் கைப்பற்றப்பட்ட அதி நவீன ரேடர் சாதனமும்..!! ஊடறுப்புத் தாக்குதல் காணொளியும்..!!


கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலின்போது பாக்கிஸ்தான் அரசாங்கத்தினால் கடந்தமாதம் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அதி நவீன ரேடர் சாதனம் பொருத்தப்பட்ட கவசவாகனமொன்றையும் புலிகள் கைப்பற்றியிருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களுடைய பார்வையில் தெரியக்கூடியவாறு இந்த ரேடார் சாதனத்தை புலிகள் பாரிய வாகன தாங்கிகளில் கொண்டுசென்றதாகவும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி 1 திகதி புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் சுமார் 1000 க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப் பட்டதாகவும் பெருமளவான புதியரக ஆயுதங்களை தாம் கைப்பற்றியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். விடுதலைப்புலிகள் நடாத்திய ஊடறுப்புத் தாக்குதலில் மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தமது பின்தள தொடர்புகளை இழந்துள்ளதாகவும் தற்பொழுது கிடைத்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கான பிரதான உணவு மற்றும் ஆயத விநியோகத்தைத் துண்டித்தபின்பே விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் மீதான இறுதித் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்து குவித்து வைத்திருந்த இராணுவ தளபாடங்களே விடுதலைப்புலிகளின் கொமாண்டோ அணியால் இத்தாக்குதலின் போது மீட்கப்பட்டிருந்தன. 20க்கு மேற்பட்ட மோட்டார்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட செல்கள்., நூற்றுக்கணக்கான ரைபிள்கள், மற்றும் ஆர்.பி.ஜி, ஆர்.பி.ஜி மோட்டார்கள், ஏறத்தாழ மில்லியன் அளவிலான தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுள் அடங்கும்.
அதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை கேப்பாபிளவு எனுமிடத்தில் விடுதலைப் புலிகளின் கரும்புலி அணியினர் மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளிவரும் ஒரேயொரு நாளிதழான ஈழநாதம் தெரிவித்திருந்தது. அப்பத்திரிகையில் கரும்புலி அணியியினருடன் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எடுத்திருந்த புகைப்படமும் வெளியாகியிருந்தது. கரும்புலி அணியினர் வாகனங்களில் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளுடன் சென்று தாக்குதல் நடாத்தியதில் ஏற்கனவே ஊடறுக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் குறிப்பிட்டளவு சில பிரதேசங்களையும் புலிகள் மீளக் கைப்பற்றினர்.
விடுதலைப்புலிகள் அணியினரின் பல்வேறு அதிர்ச்சி தரக் கூடிய தாக்குதல்கள் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாகவும் இராணுவத்தை மேற்கோள் காட்டிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா இராணுவத்தினரின் விநியோகத்திற்கெனப் பயன்படுத்தப்பட்ட ஏறத்தாழ 20 வாகனங்கள் இத்தாக்குதலின் போது அழிக்கப்பட்டுள்ளன. அத்தோடு விடுதலைப்புலிகள் பாக்கிஸ்தான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரணுவத்தினரின் கனரக ஆயுதங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் பெண்கள் அணியினரினர் தாக்குதலுக்கு தயாராவதையும் தாக்குதலின் பின்பு சிதறிக்கிடக்கின்ற படையப் பொருட்களையும் தேடியழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளையும் இந்தக் காணொளியில் காணலாம். தற்பொழுதுள்ள நிலமைகளைக் கருத்திற்கொண்டு கொல்லப்பட்ட ஏராளமான படையினரின் சடலங்களையும் சீனா பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளால் வழங்கப்பட்ட இராணுவத் தளபாடங்களையும் காணொளி மூலம் வெளியிடுவதை தாம் தவிர்த்துள்ளதாக வன்னித் தகவலொன்று தெரிவிக்கின்றது.
இச்சமரின் போது இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படையணி முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகவும். புலிகளால் மீளக்கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்புகளற்றிருக்கும் படையினரை தேடியழித்துவரும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது. (வன்னியிலிருந்து மலரவன்)

No comments: