
மேலும் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவை சேர்ந்த சில்வெஸ்டர் என்பவரும் இவருடன் இணைந்து படுகொலை வேட்டையில் இறங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் கோத்தபாயா மற்றும் பஸில் ராஜபக்ஸவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவருவதாகவும் துணை ஆயுதக் குழுவினரை மேற்கோள் காட்டிய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
மக்ஸ்டா ரக வெள்ளை நிற வானொன்றையே இவர்கள் கடத்தலுக்காக பயன்படுத்துகின்றனர். இந்த வாகனத்தின் உள்ளே சாரதி ஆசனத்திற்கு அருகில் உயரமான ஒருவர் பச்சைநிற சீருடையுடன் அமர்ந்திருப்பதாகவும் பின்னால் நான்கு அல்லது ஐந்து பேர் சிவிலுடையில் பிஸ்டல் மற்றும் ஏ.கே ரக துப்பாக்கிகளுடன் அமர்ந்திருப்பதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மட்டக்களப்பு பன்சலைக்கு அருகிலுள்ள பெற்றோல் நிரப்பு நிலயத்திற்கு அருகிலே அதிகமாக தரித்து நிற்கின்றனர். இந்த வாகனத்தில் இலக்கத்தகட்டு எண்கள் அடிக்கடி மாற்றப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகிலே பிரதான பொலிஸ்நிலையம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment