
கருணாகுழுவின் முக்கிய உறுப்பினரான ரஞ்சனின் தலைமையில் பிள்ளையான் குழுவினருக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான் இந்த ரஞ்சன் கருணாகுழுவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இயங்கிவருகிறார். அண்மையில் மீனகம் அலுவலகத்தை ரஞ்சனும் அவருடைய சகாக்களுமே கைப்பற்றியதாக ஏற்கனவே எமது செய்திகளில் வெளியிட்டிருந்தோம் தற்பொழுது இந்த மீனகம் அலுவலகத்திலிருந்தே இவரும் கருணாகுழு உறுப்பினர்கள் சிலரும் செயற்பட்டு வருகின்றனர்.
கடைசியாக எமக்குக் கிடைத்த தகவல்களின் படி பிள்ளையான் குழு உறுப்பினர்களுடைய குடும்பத்தவர்களை கடத்தி கொலைசெய்யவும், பிள்ளையான் குழு உறுப்பினர்களுடன் வால் பிடித்துத் திரியும் அப்பாவி இளைஞர்களை கடத்துவதற்குமான பொறுப்பை கருணா இவருக்கு தற்பொழுது வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. பிள்ளையான் குழு உறுப்பினர்கள் அனைவரும் முகாம்களுக்குள்ளும், அலுவலகங்களுக்கும் முடக்கப்பட்டுள்ளதால் அவர்களுடைய குடும்பத்தவர்களையும், ஆதரவாளர்களையும் கடத்திக் கொலைசெய்து அந்தப்பழியை விடுதலைப்புலிகள் மீது போட கருணா தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் தெரிய வருகின்றது.
மேலும் மட்டக்களப்பிலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் ரஞ்சனும் அவருடைய சகாக்களும் ஆயுத முனையில் கணணணிகள், இலத்திரனியல் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு அவற்றுக்கு பணம் கொடுக்காமல் மிரட்டிவிட்டுச் செல்வதாகவும் வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது உறுப்பினர்களுடைய குடும்பங்கள் கடத்தப்படுவதாக பிள்ளையான் குழு முக்கியஸ்தர்கள் இவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தனக்கு இடப்பட்டுள்ள கட்டளையின் அடிப்படையிலேயே தான் செயற்படுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக விரைவில் பிள்ளையான் குழுவின் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோருடன் நேரில் கலந்துரையாட இருப்பதாகவும் பிள்ளையான் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment